/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில நீச்சல் போட்டியில் அசத்தல்
/
மாநில நீச்சல் போட்டியில் அசத்தல்
ADDED : பிப் 14, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி - தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின நீச்சல் போட்டிகள், சென்னை கிண்டியில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது.
அதில், கோவை மாவட்டம் சார்பாக, பொள்ளாச்சி சாந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர் பிரநித் மூன்று போட்டியில் பங்கேற்று ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்றார். மாணவர் ரோஹித் கண்ணா ஒரு வெண்கலம் வென்றார்.
வெற்றி பெற்ற நீச்சல் வீரர்களையும், பயிற்சியாளர் வினோத்தையும், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

