/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட், கால்பந்து போட்டி; அண்ணா பல்கலையில் துவக்கம்
/
கிரிக்கெட், கால்பந்து போட்டி; அண்ணா பல்கலையில் துவக்கம்
கிரிக்கெட், கால்பந்து போட்டி; அண்ணா பல்கலையில் துவக்கம்
கிரிக்கெட், கால்பந்து போட்டி; அண்ணா பல்கலையில் துவக்கம்
ADDED : செப் 27, 2025 12:51 AM

கோவை; அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 11வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. நவாவூர் பிரிவு அருகே அண்ணா பல்கலை மண்டல மையத்தில் நடக்கும் இப்போட்டியில், 17 அணிகள் பங்கேற்றுள்ளன.
பல்கலை மண்டல மைய டீன் சரவணக்குமார், போட்டியை துவக்கி வைத்தார். முதல் போட்டியில், இன்போ கல்லுாரி அணியும், அண்ணா பல்கலை மண்டல மைய அணியும் மோதின. இதில், 3-0 என்ற கோல் கணக்கில், அண்ணா பல்கலை அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், எஸ்.எஸ்.இ.சி., கல்லுாரி அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல்களில் எஸ்.என்.எஸ்., அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 17 அணிகள் களம் கண்டுள்ளன. முதல் போட்டியில், சி.கே.சி.இ., அணியும், எஸ்.எஸ்.ஆர்.இ.சி., அணியும் மோதின. எஸ்.எஸ்.ஆர்.இ.சி., அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 96 ரன் எடுத்தனர்.
சி.கே.சி.இ., அணியினர், 16.1 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 99 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். ஜி.சி.டி., அணியும், இன்போ கல்லுாரி அணியும் மோதின.
ஜி.சி.டி., அணி, 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 166 ரன் எடுத்தனர். இன்போ அணியினர், 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 43 ரன் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.