/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி: எதிரணியினருக்கு கற்றுத்தந்தனர் 'பாடம்'

ADDED : மார் 05, 2024 12:49 AM

கோவை:ஸ்ரீ ரங்கநாதர் கல்லுாரியில் நடந்த, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், பேராசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், பேராசிரியர்களுக்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் மார்ச் 2ம் தேதி துவங்கியது. வரும் 24ம் தேதி வரை நடக்கிறது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 16 கல்லுாரி அணிகள் 'நாக் அவுட்' முறையில் போட்டியிடுகின்றன. போட்டியை, ரங்கநாதர் கல்லுாரி முதல்வர் கணேசன் துவக்கி வைத்தார்.
முதல் சுற்றுப்போட்டி முடிவுகள்
கிரைஸ்ட் தி கிங் கல்லுாரி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பி.பி.ஜி., அணியையும், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில், அண்ணா பல்கலை மண்டல கேம்பஸ் அணியையும், கே.கே.ஐ.டி., அணி 8 விக்கெட் வித்தியாசத்தில், எஸ்.என்.எஸ்., கல்லுாரியையும், பாவை இன்ஜி., கல்லுாரி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கைவேர்ல்டு கல்லுாரியையும், விவேகானந்தா கல்லுாரி அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராமகிருஷ்ணா அணியையும், கே.சி.டி,. அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., அணியையும் வீழ்த்தின.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் திலீப்குமார் மற்றும் ஜெயசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.