/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி; சென்னை ஐகோர்ட் அணிக்கு கோப்பை
/
நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி; சென்னை ஐகோர்ட் அணிக்கு கோப்பை
நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி; சென்னை ஐகோர்ட் அணிக்கு கோப்பை
நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி; சென்னை ஐகோர்ட் அணிக்கு கோப்பை
ADDED : ஜன 12, 2025 11:28 PM
கோவை; மூன்று மாநில ஐகோர்ட் நீதிபதி அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அணி கோப்பை வென்றது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான சகோதரத்துவ கிரிக்கெட் போட்டி, கோவை எஸ்.என்.ஆர்., மைதானத்தில் நடந்தது.
15 ஓவர் போட்டியில், முதல் போட்டியில் சென்னை- கர்நாடக அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 103 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய கர்நாடகா அணி, 79 அணிகள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இரண்டாவது போட்டியில், கர்நாடகா மற்றும் கேரளா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கர்நாடகா அணி, 75 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய கேரள அணி, 8.5 ஓவரில், 76 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதி போட்டியில் சென்னை - கேரளா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 15 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 115 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய கேரளா அணி, 15 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அணி , 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுந்தரேசன் பரிசுகள் வழங்கினார்.