/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெ.நா.பாளையத்தில் உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி
/
பெ.நா.பாளையத்தில் உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி
பெ.நா.பாளையத்தில் உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி
பெ.நா.பாளையத்தில் உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி
ADDED : செப் 29, 2025 12:37 AM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன் பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட, 15 உடற்கல்வியியல் கல்லூரிகள் தமிழகம் முழுவதும் உள்ளன. இக்கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இறுதிப்போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி அணியும், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி அணியும் மோதின.
இதில், 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 94 ரன்களை சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி அணி எடுத்தது.
அடுத்து விளையாடிய மாருதி உடற்கல்வியியல் கல்லூரி அணியினர், 17 ஓவர்களில், 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். கடந்த, 12 ஆண்டுகளாக தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கு உட்பட்ட உடற்கல்வியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், மாருதி உடற்கல்வியியல் கல்லூரி அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.