தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை


ADDED : ஜூன் 18, 2026 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 08:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

போத்தனுார்: சுந்தராபுரம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.நகர் விரிவு பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் நேற்று முன்தினம் மாலை பாட்டியுடன் வீட்டின் முன் உட்கார்ந்து மொபைல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், மூதாட்டியின் ஒரு சவரன் நகையை பறித்து தப்பினார். சதீஷ்குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தப்பிய நபரை தேடுகின்றனர்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்

பீளமேடு: மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கணேசன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த லாரியை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரிந்து லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர், டிரைவர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உணவு நிறுவனத்தில் திருட்டு

துடியலுார்: மேட்டுப்பாளையம் சாலை, ஜி.என்.மில்ஸ் பகுதியில்ராஜேஷ்குமார் என்பவர் உணவு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். 16ம் தேதி நிறுவன லாக்கரில் இருந்து 29,250 ரூபாய் திருட்டு போனது. புகாரின்படி போலீசார் விசாரித்து ஊட்டியை சேர்ந்த மைக்கேல், 43 ரகுநாதன், 28, துக்கன், 27 ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். துக்கன் கைது செய்யப்பட்டுள்ளார்; மற்ற இருவரைதேடுகின்றனர்.

குடிபோதையில் விழுந்து பலி

வெள்ளக்கிணறு: ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 52 குடிபோதையில் சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். கவுண்டன்புதுார்- வெள்ளக்கிணறு சாலையில் விழுந்து தலையில் காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

மதுபாட்டில் பதுக்கல்

உக்கடம்: பஜார் போலீசார் ரோந்து பணியின் போது, உக்கடம் ஜி.எம்.நகரில் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த செல்வம், 51 வேல்முருகன், 34 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us