ADDED : செப் 04, 2026 08:48 AM
பணம் கேட்டு அடாவடி; நான்கு பேர் கைது வடவள்ளி: தொண்டாமுத்துார் ரோட்டில் பொம்மநாயக்கன்பாளைத்தை சேர்ந்த பிருந்தா மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடை நடத்த அதே பகுதியை சேர்ந்த மதியழகனிடம் ரூ.4.50 லட்சம் கடன் பெற்றார். கடன் தொகையை உரிய காலத்தில் திரும்பி கொடுத்தார். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு மதியழன் மூன்று பேருடன், கடைக்கு சென்று மிரட்டினார். புகாரின் பேரில் மதியழகன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகனம் திருட்டு; போலீசார் விசாரணை ரேஸ்கோர்ஸ்: பி.என்.பாளையம் ரவிசங்கர் தனது பைக்கைக வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வாகனம் மாயமாகியிருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை; வழக்குகள் பதிவு வடவள்ளி: அஜ்ஜனுார் ஜங்ஷன் பகுதியிலுள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் குறித்த சோதனையில், 495 கிராம் குட்கா, பான்பராக் கைப்பற்றப்பட்டன. இதில், புதுக்கோட்டை பெரியகண்ணன், தண்டீயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ரத்தினபுரி: போலீசார் ரோந்து பணியின் போது, அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் 180 கிராம் பொருட்கள் பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கைதானார்.
பீளமேடு: தொட்டிபாளையம் பிரிவில் புகையிலை பொருட்கள் சப்ளை நடப்பது குறித்து பீளமேடு போலீசார் சோதனை செய்தனர். அங்குள்ள காலியிடத்தில், 22 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய சின்னியம்பாளையம் மதன்குமார், நீலம்பூர் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பஸ் மோதி ஒருவர் பலி மேட்டுப்பாயைம் ரோடு ஜி.என். மில்ஸ் பகுதியில், பைக்கில், துடியலுாரை சேர்ந்த முத்துக்குமார் வந்து கொண்டு இருந்தார். அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் போது, உயிரிழந்தார். ஓட்டுநர் சின்னராஜ் மீது வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்பனை; ஒருவர் கைது சிங்காநல்லுார்: நீலிகோணம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வி.ஆர்.புரம் ஸ்ரீஹரி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
