UPDATED : அக் 10, 2026 07:29 PM
ADDED : அக் 10, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
பைக் திருட்டு; ஒருவர் கைது
சரவணம்பட்டி: பீளமேடு காந்திமாநகர் சதீஸ். தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மெத்தபெட்டமைன் விற்றவர்கள் கைது
காட்டூர்: காந்திபுரம் எஸ்.இ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் பின்புறம் போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகிக்கும் படி இருவர் சுற்றித் திரிந்தனர். சோதனையில் 12.5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் வைத்திருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்த போலீசார், கோவையில் வசிக்கும் தேனி தினேஷ், மதுரை கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.
