தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 12, 2026 07:51 PM

ADDED : அக் 12, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:51 PM ADDED : அக் 12, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாயை விட்டுச்சென்றவர் மீது வழக்கு



வடவள்ளி : பெரியசாமி நகரை சேர்ந்தவர் சரவணன். நாய் வளர்த்து வந்தார். வேறு இடத்துக்கு குடிபோகும் போது, நாயை அதே வீட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. உணவு தேடி தொண்டாமுத்துார் ரோடு மகாராணி அவென்யூக்கு சென்ற நாயை அங்கிருந்த பிற நாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறின. அப்பகுதியினர் விலங்கு நல ஆர்வலர் தன்யாவுக்கு தெரிவித்தனர். அவர் பார்த்தபோது நாய் இறந்து கிடந்தது. நாயின் சடலத்தை கோவை மனித விலங்குகள் நலச்சங்கத்திடம் ஒப்படைத்தார். நாய் உரிமையாளர் சரவணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை; ஒருவர் கைது



ரேஸ்கோர்ஸ்: ரோந்து பணியின் போது, கோவை ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங் முன் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநில நபரை போலீசார் விசாரித்தனர். அவர் பீகாரை சேர்ந்த அர்வெஜ் என்பதும், 1.4 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருப்பதும் தெரிந்தது. கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருள் விற்பனை



வடவள்ளி: போலீசார் கஸ்துாரிநாயக்கன்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அதில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது. அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரை கைது செய்தனர்.

ரத்தினபுரி: ஓஸ்மின் நகர் மளிகை கடையில் போலீசார் நடத்திய சோதனையில்,1 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லுார்: ராமானுஜம் நகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியில் வசிக்கும், புதுக்கோட்டை ராஜாராம் என்பவரை சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர். பதுக்கிய 23 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பீளமேடு: ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், பெட்டிக்கடை ஒன்றில், 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த பீளமேடு போலீசார், கோவையில் வசிக்கும், புதுக்கோட்டை வசந்தகுமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us