தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 14, 2026 07:56 PM

ADDED : அக் 14, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:56 PM ADDED : அக் 14, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் போன் பறிப்பு

காந்திபுரம்: காட்டூர் ரஞ்சித்குமார், டூல்ஸ் கடை வைத்து நடத்திவருகிறார். பணி முடிந்து நஞ்சப்பா சாலையில் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வழிமறித்து தாக்கி மொபைல் போனை பறித்து தப்பினர். கல்லால் தாக்கியதால் காயமடைந்த ரஞ்சித்குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரை காட்டூர் போலீசார் விசாரித்து ராமநாதபுரம் கோகுல்கண்ணன், தேனி செந்துாரபாண்டி, கணபதி தனசேகரன் ஆகிய மூவரை கைது செய்தனர்.

* காந்திபுரம்: சரவணம்பட்டி உதய்குமார் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நிலக்கடலை, சுண்டல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டாய்லெட் சென்றுவிட்டு வந்தபோது, அவரது கடையில் வைத்திருந்த மொபைல் போன் காணாமல் போனது. புகாரின் பேரில், காட்டூர் போலீசார் கடலுார் ராம்குமார், நீலகிரி அஜய்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை

கோவை: மாநகர போலீசார் ரோந்து பணியின் போது புகையிலை விற்பனை செய்ததாக, நான்கு வழக்குகளை பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 118 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

1.95 லட்சம் ரூபாய் மோசடி

கோவை: குரும்பம்பாளையம் கோபால் என்பவருக்கு, ஓய்வூதியத்தில் சிக்கல் இருப்பதாக கூறி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து, கஸ்டமர் கேர் என்ற பெயரில் அழைப்பு வந்துள்ளது. அதை நம்பி அவர்கள் கேட்ட வங்கிகணக்கு, பாஸ்வேர்டு, ஓடி.பி. தகவல்களை பகிர்ந்துள்ளார். உடனடியாக அவரது வங்கிகணக்கில் இருந்து 1.95 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலை வாங்கித்தருவதாக மோசடி

கோவை: வால்பாறை தனலட்சுமி என்பவருக்கு தெரிந்த நண்பர் மூலம், சந்தோஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார். அவர் கேட்ட வங்கி கணக்குகளுக்கு 1.85 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

ஆவின் உரிமம் பெற்றுத்தருவதாக மோசடி

கோவை: பொள்ளாச்சி ஆனந்தகுமார் என்பவருக்கு, அடையாளம் தெரியாத நபர் மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆவின் பாலகம் அமைக்க உரிமம் பெற்றுத்தருவதாக கூறியதால் அதை நம்பி, நான்கு வங்கி கணக்குகளுக்கு 5.60 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் அந்நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us