UPDATED : அக் 14, 2026 09:09 PM
ADDED : அக் 14, 2026 08:48 PM
கோவை ஜோசியர் மீது சென்னையில் புகார்
சென்னையை சேர்ந்த 30 வயது பெண் இன்ஜினியரிடம், திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் அத்துமீறல் செய்ததாக கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிடர் கார்த்திகேயன் மீது சென்னையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடிய பெண்ணுக்கு, வாட்ஸ்-அப் மூலம் அறிமுகமான கார்த்திகேயன், திருமண தோஷம் நீக்குவதாகக் கூறி பல்வேறு கோவில்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆசை வார்த்தை கூறி, அத்துமீறியதாக கூறப்படுகிறது.
கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது; மற்றொரு பெண்ணையும் இதேபோல் ஏமாற்றினார் என பாதிக்கப்பட்ட பெண் மேற்கு தாம்பரம் இணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
போலி ஆர்.டி.ஓ. சலான்
கோவை: ஒத்தக்கால்மண்டபம் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு தெரியாத எண்ணில் இருந்து, ஆர்.டி.ஓ., சலான் ஏ.பி.கே பைல் லிங்க்காக வந்துள்ளது. அந்த லிங்க் தொட்டவுடன், இவரது கிரெடிட் கார்டில் இருந்து 2.09 லட்சம் ரூபாய் டுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏமாற்றப்பட்டது அறிந்து கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துளளார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
