தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போலீசார் விசாரணை: வாலிபர் தற்கொலை



ஆலாந்துறை: பூலுவபட்டி, மெட்டு வலவை சேர்ந்த சரவண குமார்,32. திருமணமாகாதவர். கூலி வேலை செய்து வந்தார். தொம்பிலிபாளையத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அக்.,9 அன்று சரவணகுமார், அப்பெண், அவரது 2 குழந்தைகளோடு தலைமறைவானார்.

பெண்ணின் தாயார், காருண்யா போலீசில் செய்தார். கோத்தகிரியில் இருந்த 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பெண்ணையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சரவணகுமார் நேற்று காலை, வீட்டு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகையிலை விற்றவர் கைது



சிங்காநல்லுார்: எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சோதனையில், 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மணிகண்டனை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை; இருவர் கைது



ரத்தினபுரி: ரத்தினபுரியில் சுற்றிய இருவரை சோதனையிட்டனர். 1.27 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தேனி சூர்யா, ரத்தினபுரி சுதர்சன்ராஜா என தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us