தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்


ADDED : அக் 30, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

காந்திபுரம்: கிராஸ்கட் ரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருபவர் கோபால்,28. இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அறந்தாங்கியை சேர்ந்த அலாவுதீன்,28, காந்திபுரத்தில் வழிமறித்தார். கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டிலிருந்த, ரூ. 820 ஐ பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். கோபால் கூச்சலிட்டதும் அப்பகுதியில் நின்றவர்கள் அலாவுதீனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர், போலீசார் கைது செய்தனர்.

……….

புகையிலை பொருள் விற்றவர்கள் கைது

ரேஸ்கோர்ஸ்: போலீசார், பி.என்,பாளையம்,பழையூரிலுள்ள பெட்டி கடையில் சோதனையிட்டனர். அப்போது, தடை செய்த புகையிலை பொருள் விற்றதாக, ரேவதி,50, கைது செய்யப்பட்டார். சிங்காநல்லுார், புது காலனியில் புகையிலை பொருட்களை விற்ற ரவி,55, என்பவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us