தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 01, 2026 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளைஞரை தாக்கி போன் பறிப்பு

சரவணம்பட்டி: பெரியார் நகரை சேர்ந்தவர் கிஷோர், 19. தனது நண்பர் பிரின்ஸ் ராகவனுடன், 19 வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த சரவணம்பட்டி காந்தி சாலையை சேர்ந்த சவுந்தர், 22 மொபைல்போனை கேட்டார். தர மறுத்ததால், கட்டையால் தாக்கினார். காயமடைந்த பிரின்ஸ் ராகவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் சவுந்தரை சிறையில் அடைத்தனர்.

மேயர், எம்.எல்.ஏ., மீது வழக்கு

கோவை: தி.மு.க. மாணவர் அணியினர், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முன் அனுமதி பெறாமல் நடந்ததாக இதில் பங்கேற்ற எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாணவர் அணி செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் உட்பட, 133 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

போதைப்பொருள் விற்பனை

கோவை: மாநகர போலீசார் சோதனையின் போது, போதைப்பொருட்கள் விற்ற ஜி.என்.மில்ஸ் முத்துகுமார், 34 செல்வபுரம் யுவராஜ் பூபதி, 29, போத்தனுார் பிரகாஷ், 48, விக்னேஷ்வரன், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

ரேஸ்கோர்ஸ்: போலீசார் சோதனையின் போது, ரயில்வே ஸ்டேஷன் முன் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார், 30 என்பதும் 1.500 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. கஞ்சா, 4500 ரூபாயை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us