தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகன விபத்து : ஓட்டுநர் பலி

வாகன விபத்து : ஓட்டுநர் பலி

வாகன விபத்து : ஓட்டுநர் பலி


UPDATED : ஜூலை 06, 2026 11:42 PM

ADDED : ஜூலை 06, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 11:42 PM ADDED : ஜூலை 06, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளக்கிணறு மோகன்ராஜ், 40 தனது இருசக்கர வாகனத்தில் என்.ஜி.ஜி.ஓ., காலனி புதிய மேம்பாலம் நோக்கி சென்றுள்ளார். மதுபோதையில் வேகமாக வாகனத்தை ஓட்டியதால், நிலைதடுமாறி மேம்பாலத்தின் துாணில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல் மாணவர்கள் கைது

குனியமுத்தூர் பகுதிகளில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் நேற்று முன்தினம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். எஸ்.ஐ.,தாமரைகண்ணன் தலைமையில் நடந்த இச்சோதனையில், தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இரு மாணவர்களிடம், 2.150 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அரசு பஸ் மோதி பெண் மரணம்

உக்கடம் பஸ் ஸ்டாண்டில் பாலக்காடு செல்வதற்காக காயர் நிஷா, 57 என்பவர் காத்திருந்தார். சாலையை கடக்க முயன்ற போது, கேரள பதிவு எண் கொண்ட அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று, மேல் சிகிச்சைக்காக பாலக்காடு மருத்துவனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ரத்தப்போக்கு அதிகமானதால் உயிரிழந்தார். ஓட்டுநர் சிவக்குமார், 55 என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us