-பேரூராட்சி சிசிடிவி கேமராக்களை மொபைலில் இணைத்த ரசிகர் கைது
-பேரூராட்சி சிசிடிவி கேமராக்களை மொபைலில் இணைத்த ரசிகர் கைது
UPDATED : ஜூலை 09, 2026 11:08 PM
ADDED : ஜூலை 09, 2026 11:03 PM
கெம்பனூர், அண்ணாநகரை சேர்ந்த ஜெயகுமார்,39, டூவீலர் விற்பனை தொழில் செய்கிறார். மொபைல் டெக்னாலஜியில் ஆர்வம் கொண்ட இவருக்கு ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அண்ணா நகர் பஸ் ஸ்டாப்பில், தொண்டாமுத்தூர் பேரூராட்சி பொருத்திய 3 சி.சி.டி.வி. கேமராக்களை ப்ளூடூத் மூலம் தனது மொபைல் போனுடன் இணைத்து, சி.சி.டி.வி. பதிவுகளை பார்த்து ரசிப்பார்.
இதுகுறித்து, லோக்கல் அ.தி.மு.க. நிர்வாகி மகேந்திரன், பேரூராட்சியில் புகார் சொன்னார். பேரூராட்சி நிர்வாகம் ஜெயகுமாரை கண்டிக்கவில்லை. மாறாக சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றியது. மொபைலுடன் கேமரா பேர் ஆகாததால், ஜெயகுமார் நிஜப்படம் பார்க்க முடியவில்லை. என்ன நடந்தது என விசாரித்தபோது, கேமராவே இல்லை என்பதை கண்டுபிடித்தார். வாட்ஸ் அப் குழுவில், மகேந்திரனை கடுமையாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மகேந்திரன் புகாரின்பேரில், ஜெயகுமாரை கைது செய்தனர்.
--== போலி பத்திர நிலம் வாங்கி
குடும்பமே ஏமாந்த பரிதாபம் சூலூர் சந்திரசேகர் குடும்பத்தில் 13 பேர். சேர்ந்து வசிக்க விரும்பினர். வீடு கட்ட நிலம் தேடினர். கட்டட பொருள் கடை நடத்தும் கவுண்டம்பாளையம் மணிக்கு தெரியவந்தது. பொள்ளாச்சியில் குறைந்த விலையில் நிலம் வாங்கி தருவதாக சொன்னார். பத்திரமும் காட்டினார். சந்திரசேகர் சந்தோசமாக கிரையம் முடித்தார். வீடு கட்டினார்.
கடைசி சீனில் வரும் போலீஸ் மாதிரி, கட்டி முடியும் நேரத்தில் கிராம அதிகாரி வந்தார். ”அடடா, இது எஸ்.சி. பிரிவினருக்கு அரசு ஒதுக்கிய விவசாய நிலம் அல்லவா.. இதில் வீடு கட்ட முடியாதே?” என்றார்.என்றும் தெரிவித்துள்ளார்.
பத்திரம் மொத்தத்தையும் சந்திரசேகர் காட்டினார். அது போலி என்றார் அதிகாரி. 13 பேரும் தலையில் கைவைத்து உட்கார்ந்தனர். போலீசில் சந்திரசேகர் புகார் கொடுத்தார். மணியை போலீசார் பிடித்தனர். போலி பத்திரம் தயாரித்தது எப்படி என விசாரித்தனர். அவர் பல பேரை கை காட்டினார். தொடர்ந்து விசாரிக்கின்றனர். == கஞ்சா புகையிலை விற்ற 4 பேர் கைது
ரேஸ்கோர்ஸ் போலீசார் ரயில்வே ஸ்டேஷனில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு அஜீத், 23 புதுக்கோட்டை அனுஷ்யன், 23 எனத் தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 500 கிராம் கஞ்சா, 4.5 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த உக்கடம், அப்துல் ஹக்கீம், 51 வடவள்ளி ஆனந்த், 41 ஆகிய இருவரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். ==
சாலை விபத்தில் ஒருவர் பலி
சாய்பாபா காலனி செங்குட்டுவேலன், 66. கரும்புக்கடை பகுதியில், பைக்கை வேகமாக ஓட்டி சென்றார். சாலையை கடக்க முயன்ற விழுப்புரம் பலராமன், 81 மீது மோதினார். பலத்த காயமடைந்த பலராமன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
==
வீடு புகுந்து மொபைல் திருட்டு
சரவணம்பட்டி கிருஷ்ணசாமி, 76. வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் ஜார்கண்ட்டை சேர்ந்த சுஸ்கில்கோவா, கதவின் பூட்டை உடைத்து மொபைல் போனை திருடினார். சத்தம் கேட்டு விழித்த கிருஷ்ணசாமி சத்தமிட்டார். அக்கம்பக்கத்தினர் திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
==
மின் ஒயரை மிதித்த தொழிலாளி பலி
நியூ சித்தாபுதுார் தனலட்சுமி நகர் வழியாக சென்ற, தனியார் பார்சல் சர்வீஸ் வண்டி மின்கம்பத்தில் மோதியதில், மின் ஒயர் அறுந்து சாலையில் விழுந்தது. அவ்வழியாக பணிக்கு செல்ல நடந்து வந்த மலுமிச்சம்பட்டி சுதாகரன் மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
