ADDED : ஜூலை 14, 2026 07:41 AM
ஏ.டி.எம். கார்டை மாற்றி திருடியவர் கைது
ரத்தினபுரி: ரத்தினபுரியை சேர்ந்த நாகராஜ், 46 வங்கிக்கணக்கில் இருந்து மகனை பணம் எடுத்து வர அனுப்பினார். மகன் பணம் எடுக்கும் போது, அருகில் நின்றிருந்த திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜ், 37 உதவுவது போல் ரகசிய எண்ணை கவனித்துள்ளார். பின், கார்டை மாற்றி ரூ.17,200 ஐ திருடியுள்ளார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் சரண்ராஜை சிறையில் அடைத்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
* கோவை: புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 7 வழக்குகளை மாநகர போலீசார் பதிந்துள்ளனர். உக்கடம் பசீர், 50, ரத்தினபுரி சின்னபாண்டி, 53, துடியலுார் பூமி பாலகன், 37, சிங்காநல்லுார் லட்சுமி, 70 சரவணம்பட்டி விஜயன், 48 சுரேஷ், 46 புதுக்கோட்டை காளிமுத்து, 36 கணபதி கதிரவன், 39 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்; 143 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
* குனியமுத்துார்: குனியமுத்தூர் போலீசார் நேற்று முன்தினம் கோவைபுதுார், நாகபிள்ளையார் கோவில் அருகேயுள்ள சுந்தரி பெட்டிக்கடையில், சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு இருந்த 52 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கோவைபுதுாரை சேர்ந்த இளங்கோ, 65 கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற இருவர் கைது
*ஆர்.எஸ்.புரம் போலீசார் சோதனையின் போது, லாலி ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் ஆரிஷ், 19 என்பவரை கைது செய்தனர். 300 கிராம் கஞ்சா, 5 மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.
* ரேஸ்கோர்ஸ் போலீசார் லங்கா கார்னர் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தீபன்கர் பானிக், 28 கைது செய்தனர். 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் ரூ.80 ஆயிரம் திருட்டு
சுந்தராபுரம்: மதுக்கரை மார்க்கெட் ரோடு கஸ்துாரி நகரில் வசிப்பவர் கந்தசாமி, 38. இவர் 10ம் தேதி தாராபுரம் சென்றார். திரும்பி வந்தபோது, முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் உள்ள பூஜை அறை கபோர்டில் இருந்த ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காலியிடத்தில் கிடந்த சிசு
ஒத்தக்கால்மண்டபம்: அரிசிபாளையத்தில் தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று மாலை இதன் பின்புறமுள்ள காலியிடத்தில், பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் குழந்தை, பனிக்குடம் மற்றும் ரத்தக்கறைகளுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுக்கரை போலீசார், குழந்தையை மீட்டு, அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்த பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம், குழந்தையை விட்டுச்சென்ற நபரை தேடுகின்றனர்.
