தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


UPDATED : ஜூலை 14, 2026 07:39 PM

ADDED : ஜூலை 14, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 07:39 PM ADDED : ஜூலை 14, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சரவணம்பட்டி: சரவணம்பட்டி போலீசார், கணபதி, கே.கே.நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மூன்று ஸ்கூட்டரில் சாக்கு மூட்டைகளுடன் வந்தவர்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடமிருந்து 139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட கணபதி, பாரதி நகர் கதிரவன்,39, கொண்டயம்பாளையம் சுரேஷ்,46, விஜயன்,48, ஆகியோரை கைது செய்தனர். மூன்று ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

பெண் ஆயுள் கைதி உயிரிழப்பு

கோவை: திருப்பூர் மாவட்டம், குமார் நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி,48. 2012ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். சிறுநீரக பிரச்னைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறி ஆசாமி கைது பீளமேடு: ஒண்டிப்புதுார், யுரியா நகரை சேர்ந்தவர் கமலேஷ். கார் டிரைவர். பீளமேடு, பூங்கா நகரில் சென்ற போது, விருதுநகர், மேல வீதியை சேர்ந்த கார்த்திக்,26, வழிமறித்து கத்தியை காட்டி ரூ. 2,000 பறித்து தப்பினார். அவர் கூச்சலிட்டதால் அவ்வழியாக வந்தவர்கள் கார்த்திக்கை பிடித்தனர். பீளமேடு போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

சாவியுடன் நின்ற ஸ்கூட்டர் திருட்டு

ஆர்.எஸ்.புரம்: கெம்பட்டி காலனி, பாளையம் தோட்டத்தை சேர்ந்தவர் இந்துமதி,35. முத்தண்ணன் குளக்கரையோரம் சாவியுடன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வாக்கிங் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் மாயமாகியிருந்தது. ஆர்.எஸ்.புரம் போலீசார் ஸ்கூட்டியை திருடிய வேலாண்டிபாளையம், மருதகோனார் வீதியை சேர்ந்த கார்த்திக், 26, என்பவரை சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவர் விபத்தில் பலி

பேரூர்: பச்சாபாளையம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் வீராசாமி, 49; டிரைவர். இவரது மகன் பிரதாப், 23. கோவை அரசு சட்டக்கல்லூரியில், தொலைதூர கல்வி மூலம் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று பச்சாபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டில், வாகனம் மோதியதில், தலை நசுங்கி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிய வாகனம் பற்றி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us