தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலியல் சீண்டல் வழக்கு:கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

பாலியல் சீண்டல் வழக்கு:கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

பாலியல் சீண்டல் வழக்கு:கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்


UPDATED : ஆக 06, 2026 07:13 PM

ADDED : ஆக 06, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 07:13 PM ADDED : ஆக 06, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனுார்: இங்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டரின் வாகன ஓட்டுநராக வேலை செய்தவர் கான்ஸ்டபிள் மணிவேந்தன். பொள்ளாச்சிக்கு சென்று பேருந்தில் கோவை திரும்பியபோது, கிணத்துக்கடவு அருகே பஸ்ஸில் ஏறிய கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். முதல் கட்ட விசாரணை அறிக்கை, போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது. மணிவேந்தனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார்.

--

கொலை மிரட்டல்; 5 பேர் கைது

உக்கடம்: புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும், விக்ரமார்த்தாண்டம், என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்தது. அதன் அடிப்படையில், குடியிருப்பை காலி செய்ய கோரி அரிவாளுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த உக்கடத்தை சேர்ந்த மணி, 20 தவ்பிக், 20 பசுபதி, 21, புல்லுக்காடு விஷ்வா, 24 மற்றும் பிரசாந்த், 22 ஆகிய ஐந்து பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பெரியகடை வீதி போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது

பீளமேடு : பீளமேடு துரைசாமி லேஅவுட் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு நின்றிருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது, கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. கஞ்சா விற்ற மதுரையை சேர்ந்த சண்முகபிரியன், 20 என்பவரை போலீசார் கைது செய்தனர். உடன் இருந்த, கவுதம், 20 தப்பினார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் தனியார் கல்லுாரி மாணவர்கள் எனத் தெரிந்தது. சக மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செல்வபுரம்: போலீசார் சோதனையின் போது, பேரூர் மெயின் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த சவுரிபாளையம் கார்த்தியை பிடித்து சோதனை செய்தனர். அவர் விற்பனைக்காக 1.160 கிலோ கஞ்சா, 30 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us