தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருள் விற்றவர் கைது

போதைப்பொருள் விற்றவர் கைது

போதைப்பொருள் விற்றவர் கைது


UPDATED : ஆக 12, 2026 09:38 PM

ADDED : ஆக 12, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 09:38 PM ADDED : ஆக 12, 2026 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரேஸ்கோர்ஸ்: போலீசார் சோதனையின் போது, ரயில்வே ஸ்டேஷன் விநாயகர் கோவில் அருகே, நின்று இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அஸ்ஸாம் ஹபீபர் ரகுமான், 29 என்பதும், 10 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

உக்கடம்: பெரியகடை வீதி போலீசார், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரத்தை சேர்ந்த விஷ்ணுபாலா, 18 என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, புலியகுளத்தை சேர்ந்த உத்ரா மணிகண்டன், 24 உதய விக்ரம், 20 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பறிமுதல்; வெல்டர் கைது

ஈச்சனாரி: பைபாஸ் சாலை சுங்கசாவடி அருகே போலீசார் கண்காணித்தனர். பைக்கில் வந்த ஒருவரை விசாரித்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த மவுஷம் குமார், 30, அன்னூர், கோவில்பாளையத்தில் தங்கி, வெல்டராக வேலை பார்த்து வருவது தெரிந்தது. வாகனத்தில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள் இருந்தன. பைக்குடன் அவற்றை பறிமுதல் செய்து, மவுஷம் குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஒயர் திருடியவர் கைது

சுந்தராபுரம்: போத்தனூர் அடுத்த மேட்டூரில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் காப்பர் ஒயர் திருடியதாக கணேசபுரம், செல்வ விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த சந்தோஷ், 24 என்பவரை சுந்தராபுரம் போலீசார் கைது செய்தனர். ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us