தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஆக 21, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மனைவிக்கு கத்திக்குத்து பெரியகடை வீதி: கெம்பட்டி காலனி, 2வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரபாபு. அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். இதை மனைவி பிரியதர்ஷினி கண்டித்தும் கேட்காததால் தாய் வீட்டுக்கு சென்றார். அவரது துணிகளை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகேந்திரபாபு, மனைவியில் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பினார். பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரியகடை வீதி போலீசார், மகேந்திரபாபுவை தேடி வருகின்றனர்.

2 கிலோ கஞ்சா விற்றவர் கைது சாய்பாபாகாலனி: வடகோவை, கூட்ஷெட் ரோட்டில் சாய்பாபாகாலனி போலீசார்  ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த பீகாரை சேர்ந்த வினோத்ராமிடம் சோதனையிட்ட போது, 2 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். வினோத்ராம், செல்வபுரத்தில் அறை எடுத்து தங்கி கஞ்சா விற்றது தெரிந்தது. அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

மனைவி திட்டியதால் கணவன் மாயம்  வி.எச்.ரோடு : தெலுங்கு வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி. அடிக்கடி குடித்து விட்டு வந்ததை மனைவி முத்துலட்சுமி கண்டித்தார். மது குடித்தால் இனி வீட்டுக்குள் விடமாட்டேன் என, மனைவி எச்சரித்தார். இதனால் கோபத்தில் வெளியே சென்ற அழகர்சாமி, வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்றவர் கைது  கரும்புக்கடை: கரும்புக்கடை, சவுக்கார் நகரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியை சேர்ந்த சவுகத்அலி, கேரள மாநில லாட்டரி விற்றுக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 36 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

விபத்தில் எலக்ட்ரிசியன் பலி பீளமேடு: கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஜிஜோ. துடியலுாரில் உறவினர் வீட்டில் தங்கி, விமானநிலையத்தில் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பணியை முடித்துவிட்டு,  அவிநாசி- ரோட்டில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். பீளமேட்டில் காரை  கடக்க  முயன்ற போது, காரின் கண்ணாடி பைக்கில் உரசியது. நிலைதடுமாறி மேம்பால துாணில் மோதியதில் உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us