தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஆக 25, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளிக்கு  கத்தரி குத்து  ஆவாரம்பாளையம்: ஆவாரம்பாளையம் ரோடு, பெருமாள்  கோவில் பகுதியிலுள்ள பியூட்டி பார்லரில் நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ்பாம்,22, சமையல் உதவியாளராக உள்ளார். அதே பார்லரில் நாகலாந்தை சேர்ந்த பெனவ் கோன்யாக்,23 என்பவர் பணிபுரிந்தார். இவரது உறவினர் பெண்ணுக்கு  இன்ஸ்டாகிராம் வாயிலாக பிரகாஷ்பாம்  தவறான தகவல் அனுப்பினார். இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கத்தரிக்கோலால் பிரகாஷ்பாம் மார்பில் குத்திவிட்டு பெனவ் கோன்யாக் தப்பினார். புகாரின் பேரில், பெனவை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

விபத்துகளில் இருவர் பலி கோவை: ஆவாரம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த அசோக்குமார்,31. ஐ.டி., நிறுவன ஊழியர். 21ம் தேதி இரவு, பீளமேடு டைடல் பார்க் ரோட்டில் பைக்கில் சென்றார். அரசு மருத்துவ கல்லுாரி காம்பவுண்ட் சுவரில் மோதி பலத்த காயமடைந்த அசோக்குமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

* துடியலுார், வெள்ளக்கிணறு, பேஸ் 2 வை சேர்ந்தவர் ரோகித்,19. இவரது நண்பர்கள்  நிதின் மற்றும் ஜீசர் ரூபாஸ், 29, ஆகியோருடன் 24ம் தேதி பைக்கில் சென்றார். ஜீசர் பைக்கை  ஓட்டினார். என்.ஜி.ஜி.ஓ., காலனி ரோட்டில் வேகமாக சென்ற போது மின் கம்பத்தின் மீது பைக் மோதியது. ரோகித் உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல் வடகோவை: வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், சாய்பாபாகாலனி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  சட்டவிரோதமாக கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த இத்தேசாம்,29, மோகிம்,32, மேற்கு வங்கத்தை சேர்ந்த லாலு,26, சஜிபுல் பிஸ்வால்,22, பெர்டோஸ்,20,  ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருடிய பெண்கள் கைது  மதுக்கரை: மேட்டாங்காட்டை சேர்ந்த சந்தியா, ஓணம் பண்டிகைக்கு துணி எடுக்க  டவுன்ஹால் சென்றார். நெரிசலை பயன்படுத்தி அவரது பேக் திருடப்பட்டது. புகாரின் பேரில் உக்கடம் போலீசார் விசாரித்து, பேக்கை திருடிய செட்டிபாளையம் காயத்ரி, 28, பழனியம்மாள், 20 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ.3,100 பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us