ADDED : ஆக 26, 2026 07:33 PM
குடிநீர் கேன் சப்ளையருக்கு அறிவாள் வெட்டு விளாங்குறிச்சி :பீளமேட்டை சேர்ந்தவர் பத்மநாபன். இரு மாதங்களாக தனியார் பேக்கரிக்கு குடிநீர் கேன்களை வழங்கி வந்தார். 24-ம் தேதி மாலை கேனுக்கான விலை குறித்து பத்மநாபனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கந்தீபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பத்மநாபன் தனது மனைவியுடன் அங்கு சென்றபோது, கந்தீபன் அவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டினார். அப்போது பத்மநாபனின் மகன் அருண் சக்ரவர்த்தி அங்கு வந்தார். இருதரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கந்தீபன் அரிவாளால் வெட்டியதில் அருண்சக்ரவர்த்தியின் இடது மணிக்கட்டு அருகே வெட்டுக்காயம் ஏற்பட்டது. பத்மநாபன் புகாரில் பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கட்டுமானப் பொருட்கள் கொட்டியதால் தகராறு
ஆர்.எஸ்.புரம்: காமராஜபுரம் பகுதியில் அனுமதியின்றி கட்டுமானப் பொருட்களை கொட்டியது குறித்து இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. ரோந்து சென்ற போலீசார் எச்சரித்து, தகராறில் ஈடுபட்ட காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் மூர்த்தி மற்றும் காயத்ரி மீது வழக்கு பதிந்தனர்.
