தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவரை தாக்கிய இருவர் கைது

மாணவரை தாக்கிய இருவர் கைது

மாணவரை தாக்கிய இருவர் கைது


UPDATED : ஆக 29, 2026 07:14 PM

ADDED : ஆக 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 07:14 PM ADDED : ஆக 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உக்கடம் : மரக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகில், பைக் நிறுத்தியது குறித்த பிரச்னையில், கல்லுாரி மாணவர் இடையர் வீதி தீபக்குமாரை, வெரைட்டி ஹால் திருமால் வீதியை சேர்ந்த யாகூப்கான், ஜாபருல்லாகான் ஆகிய இருவர் தாக்கினர். தகராறில் ஈடுபட்டனர். புகாரின் பேரில், வெரைட்டி ஹால் போலீசார் விசாரித்து இருவரையும் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை

உக்கடம் : உக்கடம் போலீசார் ரோந்து சென்றபோது, கோட்டைமேடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த முகமது அப்துல் ரகீமை கைது செய்தனர்.

பீளமேடு : போலீசார் ரோந்து சென்றபோது, தொட்டிபாளையம் சாலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தொட்டிபாளையம் பிரிவில் வசிக்கும், புதுக்கோட்டை கருப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனைகட்டி : தடாகம் போலீசார், ஆனைகட்டி ரோட்டில் சேம்புக்கரை பிரிவில் வாகன சோதனை நடத்தினர். காரில் தடை செய்யப்பட்ட, 100 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற கேரளாவை சேர்ந்த பவித்ரன், 29, சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை ; ஒருவர் கைது

சரவணம்பட்டி : அப்பகுதி போலீசார் ரோந்து பணியின் போது, சின்னவேடம்பட்டி சிவபிரசாத் நேதாஜி நகரில் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கார்பென்டர் பலி; போலீசார் விசாரணை

ஈச்சனாரி : முத்து நகரை சேர்ந்தவர் திருப்பதி, 58. கார்பென்டர். ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று மலுமிச்சம்பட்டி, நாகசக்தியம்மன் கோவில் எதிரேயுள்ள மணிவண்ணன் என்பவரின் வீட்டில், பணிக்கு சென்றார். காலை 11:20 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனிருந்தோர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர், வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

செட்டிபாளையம்: போலீசார் செட்டிபாளையம் - போத்தனூர் ரோட்டில் ரோந்து சென்றனர். சின்ன ரேடியோ ஸ்டேஷன் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றின் எதிர்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தனர். அவர் பீகார் மாநிலம், மாக்தும்பூரை சேர்ந்த நிரஞ்சன்குமார், 24 என்பதும், ஈச்சனாரியில் தங்கியிருப்பதும் தெரிந்தது. அவர் விற்பனைக்காக, 1.15 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us