UPDATED : செப் 02, 2026 11:22 PM
ADDED : செப் 02, 2026 08:12 PM
ஆர்.எஸ்.புரம்: வெங்கடாச்சலம் காலனியில் வசிப்பவர் சூரிய நாராயணன். இரவு, 11:30க்கு துாங்கச் சென்றார். காலையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், வெள்ளி பொருட்கள், ரூ.40 ஆயிரம் காணாமல் போயிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டி பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், 23 ஆயிரம் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைத்தன. பேக்கரியை நடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராம்நாத், சிவவடிவேல், அஜய் கைது செய்யப்பட்டனர்.
* சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த வீரண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
