UPDATED : செப் 07, 2026 10:27 PM
ADDED : செப் 07, 2026 09:20 PM
உக்கடம்: வெரைட்டி ஹால் சாலையில் வசிப்பவர் முத்துசாமி. இவரது மகள் கீதாஞ்சலி. சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பற்றியது. இவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருள் பறிமுதல்
துடியலுார்: போலீசார் ரோந்து பணியின் போது, இடிகரை சாலை அரசு மருத்துவமனை அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். 52 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. பறிமுதல் செய்ய போலீசார் கைது செய்தனர். அவர் பாலக்காட்டை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
* பீளமேடு: நேரு நகரில் பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்து 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, ராமநாதபுரம் மாவட்டம் அபினாஷ் என்பவரை கைது செய்தனர்.
போதை மாத்திரை விற்றவர் கைது
ரத்தினபுரி: சிவானந்தாகாலனியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கண்காணிப்பை தீவிரப்படுத்தி சந்தேகத்தின்படி ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இரு விதமான போதைக்கு பயன்படுத்தப்படும் வலி மாத்திரை 66 இருந்தது. பறிமுதல் செய்தனர். குற்றத்தில் ஈடுபட்ட நபர் நாகலாந்து மாநில தங்கிலிமாங் ஹன்சிங் என்பது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
