UPDATED : செப் 10, 2026 07:57 PM
ADDED : செப் 10, 2026 07:52 PM
கிணத்துக்கடவு: நெகமம் அருகே, தென்னை நார் தொழிற்சாலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், மனைவி மற்றும் 15 வயது மகளுடன் தங்கி வேலை செய்கிறார். கடந்த, 7ம் தேதி காலை, மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயராஜ்குமார், 40, என்பவரும் காணவில்லை. இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுமியும், ஜெயராஜ்குமாரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்தது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார், ஜெயராஜ்குமாரை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
விசாரணையில், ஜெயராஜ்குமார் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, சிறுமிடம் திருமணம் ஆசை காட்டி திருப்பூருக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
பஸ் மோதி ஒருவர் பலி
உடுமலை: மதுரை, பழங்காநத்தம், பாலரங்கநாதபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்,21. நேற்று முன்தினம், உடுமலை- பழநி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியில் வந்த, திருக்குமரன் மினி பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். மினி பஸ் டிரைவர் கண்ணமநாயக்கனுாரை சேர்ந்த சங்கரகணபதி, 22, கைது செய்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கிணத்துக்கடவு: சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மாதேஷ், 21 மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் கடந்த மாதம் 6ம் தேதி இரவு, நண்பரான சொலவம்பாளையம், உதயம் நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், 22, என்பவரை கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் மாதேஷ்சை கைது செய்தனர்.
