UPDATED : செப் 12, 2026 07:33 PM
ADDED : செப் 12, 2026 07:01 PM
உக்கடம்: என்.எச். ரோட்டை சேர்நத யோகநாத் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அங்குள்ள, மாகாளியம்மன் கோவில் பொறுப்பாளராகவும் உள்ளார். 10ம் தேதி இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இரவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.5000 பணம் திருடப்பட்டு இருந்தது. உக்கடம் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகள் கைரேகைகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது
சாய்பாபாகாலனி: ரோந்து பணியின் போது, கே.கே.புதுாரில் சந்தேகப்படும் படி நின்று இருந்தவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்து கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ஜெயராஜ் எனத் தெரிந்தது. இவரிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* சரவணம்பட்டி: கணபதி மாநகர் பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சோதனை நடத்தி பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் கணபதியில் வசிக்கும் சிவகங்கை ஹரிஹரன் என்பவரை கைது செய்தனர்.
லேப்டாப்கள், மொபைல்போன்கள் திருட்டு
குனியமுத்துார் பி.கே.புதூர், இ.பி., காலனியில் ஜெயதர்சன், 19, நண்பர்களுடன் தங்கியுள்ளார். அருகிலுள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகின்றனர். 31ம் தேதி இரவு நண்பர்கள் துாங்கிய நிலையில், ஜெயதர்சன் நள்ளிரவு 1 மணி வரை படித்துக் கொண்டிருந்தார். அசதியில் அறையின் கதவை பூட்டாமல் தூங்கிவிட்டார். அதிகாலை, 4 மணிக்கு துாக்கம் கலைந்து எழுந்த ஜெயதர்சன் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அறையை சோதனையிட்டதில், 4 லேப்டாப்கள், மூன்று மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
