தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : செப் 14, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வழிப்பறி; மூவர் கைது 

உக்கடம்: கெம்பட்டிகாலனியை சேர்ந்தவர் மாரிமுத்து; பூ வியாபாரி. வேலை முடிந்து சென்ற போது, புல்லுக்காட்டில் இருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை பிடித்து, பெரியகடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் புல்லுக்காடு சுரேஷ், கெம்பட்டிகாலனி பாலானி என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

செல்வபுரம்: சந்திரசேகரபுரத்தை சேர்ந்த பால்பாண்டி சாக்கு குடோன் வைத்துள்ளார்.  ராஜரத்தினம் கார்டனில், நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 கேட்டு மிரட்டினார். பால்பாண்டி அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்ததால், அந்நபர் தப்பினார். செல்வபுரம் போலீசார் விசாரணையில், செட்டிபாளையம் மனோஜ்குமார் சிறையில் அடைத்தனர். 

புகையிலை பொருட்கள் விற்பனை

வடவள்ளி: காளப்பநாயக்கன்பாளையம் கந்தன் பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை செய்தனர். அதில் புகையிலை விற்ற கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்வா கைது செய்யப்பட்டார்.

பீளமேடு:  தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள, பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில், இரு கடைகளில் புகையிலை விற்றது தெரிந்தது. கடை உரிமையாளர்கள் புதுக்கோட்டை வேம்பையன், மலுமிச்சம்பட்டி சரவணன் ஆகியோரை கைது செய்தனர். 

பாட்டி, பேரனை தாக்கிய இருவர் கைது

கோவை: ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பூங்கொடி. 10ம் தேதி மாரியப்ப ஆசாரி வீதியில் உள்ள தாய் வீட்டில் இருந்த இரண்டாவது மகன் சஞ்சயை அழைத்து வர சென்றார். சஞ்சய் தனது பாட்டியுடன் அழுது கொண்டிருந்தார். விசாரித்ததில், சஞ்சய் வீட்டின் முன் நின்றிருந்த போது வசந்த், 25, தினேஷ்குமார், 26, சஞ்சய் ஆகியோர் வந்தனர். சஞ்சயை அடித்துள்ளனர். பாட்டி கேட்ட போது, அவரை மிரட்டிய கும்பல் வீட்டினுள் புகுந்து பொருட்களை உடைத்தது. சஞ்சயை தாக்கிய கும்பல், கொலை மிரட்டல் விடுத்து தப்பியது. பூங்கொடி புகாரில் குனியமுத்தூர் போலீசார் வசந்த், தினேஷ்குமாரை கைது செய்தனர். வெங்கடேஸ்வரன், சஞ்சய் ஆகியோரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us