தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓடும் லாரியில் டிரைவர் உயிரிழப்பு

ஓடும் லாரியில் டிரைவர் உயிரிழப்பு

ஓடும் லாரியில் டிரைவர் உயிரிழப்பு


UPDATED : செப் 15, 2026 05:53 PM

ADDED : செப் 15, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 05:53 PM ADDED : செப் 15, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி, லவ் டேலை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 65; டிரைவர். அதிகாலை உக்கடத்திலிருந்து பழம் லோடு ஏற்றிக்கொண்டு ஊட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். பெ.நா.பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே அதிகாலை, 3:45 மணிக்கு வந்த போது டிரைவர் பரமேஸ்வரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். லாரி அங்குள்ள பாலத்தின் தண்ணீர் பைப்பில் உரசி நின்றது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஊழியர்கள் பரிசோதித்த போது, பரமேஸ்வரன் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மண் கடத்திய லாரிகள் பறிமுதல்

அவிநாசி ரோட்டில் உள்ள நீலம்பூர் சர்வீஸ் ரோட்டில், தனியார் பனியன் நிறுவனம் அருகே கனிம வள துறை சிறப்பு துணை தாசில்தார் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தினர். டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், ஆவணங்களை ஆய்வு செய்ததில், உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல், மூன்று லாரிகளில், தலா , ஆறு யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது தெரிந்தது. மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

கவுண்டம்பாளையம் போலீசார் அசோக் நகர் கீழ் பகுதியில் ரோந்து சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா, 46, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்த, 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us