தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிரைம் கார்னர்: கோவை

கிரைம் கார்னர்: கோவை

கிரைம் கார்னர்: கோவை


UPDATED : செப் 22, 2026 06:42 PM

ADDED : செப் 22, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 06:42 PM ADDED : செப் 22, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள் வைத்திருந்தவர் கைது:

அன்னூர் போலீசார் நேற்று காரேகவுண்டம்பாளையம் பகுதியில் தோட்டங்களில் சோதனை நடத்தினர். இதில் ஒரு தோட்டத்தில், 10 லிட்டர் கள்ளுடன் அச்சம்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன், 62, என்பவர் பிடிபட்டார். கள்ளை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனைக் கைது செய்தனர்.

விபத்தில் ஒருவர் பலி:

மேட்டுப்பாளையம் அப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சோபன் பாபு, 23; காய்கறி வியாபாரி. இவர் பைக்கில், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் டேங்க் மேடு பகுதியில் சென்றபோது, சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சோபன் பாபு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us