தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 

கிரைம் கார்னர் 


ADDED : செப் 25, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளம்பர் மீது தாக்குதல் 

சாய்பாபா காலனி: கோவில்மேடு கோபால்சாமி பிளம்பராக பணிபுரிகிறார். இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றவரை, தெரிந்த நபர் போனில் அழைத்து, நல்லம்மாள் வீதியில் உள்ள மைதானத்துக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த நபரை மகேந்திரன், கவுதம், அருண் ஆகிய மூன்று பேர் மிரட்டி தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்தனர். அருண் என்பவரை தேடுகின்றனர். 

கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி

சரவணம்பட்டி: விநாயகபுரம் செல்வகுமார் பழவியாபாரம் செய்கிறார். நண்பரை பார்த்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, சரவணம்பட்டி சவுந்தர் என்ற நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். செல்வகுமார் அச்சத்தில் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் பிடித்தனர். புகாரின் பேரில்  சவுந்தரை போலீசார் கைது செய்தனர். 

 கட்டுமான இடத்தில் மின்ஒயர் திருட்டு 

பீளமேடு: சிங்காநல்லுார் பிரகாஷ், கருப்பராயன்பாளையம் பகுதியில் வீடு கட்டிவருகிறார். அடையாளம் தெரியாத நபர்கள் கம்பிகளை திருடி விட்டதாக அவர் அளித்த புகாரின்படி விசாரித்த பீளமேடு போலீசார் அரியலுார் தமிழரசன், தர்மபுரி ரஞ்சித், வெற்றிவேல், காளப்பட்டி தீபக் ஆகியோரை கைது செய்தனர். 

சாலை விபத்தில் முதியவர் பலி

ராமநாதபுரம்: நஞ்சுண்டாபுரம் சாலையில், பைக்கில் வேகமாக சென்ற போத்தனுார் பால்ராஜ், நடந்து சென்ற முதியவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்த்தும் அதிக ரத்தப்போக்கு  காரணமாக உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரிக்கின்றனர். 

புகையிலை பொருட்கள் விற்பனை 

சிங்காநல்லுார்: ரோந்து பணியின் போது ராமானுஜம் நகரில் பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்தனர். கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராஜாராமை கைது செய்தனர். 

பீளமேடு : கருப்பண்ண கவுண்டர் வீதி பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்றதாக அம்ரூதீன் பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர். 

சரவணம்பட்டி: அத்திபாளையம் ஜங்ஷன் ரவீந்தரநாத் தாகூர்  சாலையில் புகையிலை பொருட்கள் விற்ற சந்தோஷ், பெருமாள், ஹரிஸ், பாலகார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us