தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர் : கோவை மாவட்டம்

கிரைம் கார்னர் : கோவை மாவட்டம்

கிரைம் கார்னர் : கோவை மாவட்டம்


UPDATED : செப் 27, 2026 09:38 PM

ADDED : செப் 27, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 09:38 PM ADDED : செப் 27, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குட்கா, கஞ்சா பறிமுதல்

வடவள்ளி: காளப்பநாயக்கன்பாளையத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, அதில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா இருந்தது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து, அவற்றை கடத்தி வந்த புதுக்கோட்டை செல்வா, 27, மதுக்கரை ஆண்ட்ரூஸ், 41 ஆகியோரை சிறையில் அடைத்தனர். 186 கிலோ குட்கா, மற்றும் 500 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா சாக்லேட் பறிமுதல் ரத்தினபுரி: போலீசார் ரோந்து பணியின்போது, சாஸ்திரி நகர் மயானம் அருகில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது. விசாரணையில் குனியமுத்துார் அபுபக்கர் சித்திக், பி.கே.புதுார் சர்புதீன், வீரகேரளம் முருகன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா, 880 கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டன.

பஸ்சில் தாலி பறிப்பு உக்கடம் : பொள்ளாச்சி-கோவை தனியார் பஸ் கண்டக்டர் இனியவன். பஸ் உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே வந்தபோது, கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள், பயணிகளின் பையில் திருடுவதை இனியவன் கவனித்து சக பயணிகளின் உதவியுடன் பிடிக்க முயன்றார். 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பஸ் மெதுவாக சென்றதை பயன்படுத்தி தப்பி ஓடினார். மற்றொரு பெண் முத்துமாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவரிடம் இருந்த, 2கிராம் தாலி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் பெண் பலி துடியலுார்: மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் தாமோதரன் ஜீப்பில் வேகமாக வந்துள்ளார். அதே வழியில் நடந்து சென்ற சரஸ்வதி, 70 மீது மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல் காந்திபுரம்: காட்டூர் போலீசார் ரோந்து சென்றபோது, காந்திபுரம் 11வது வீதியில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்து சோதனை நடத்தினர். இதில், 5.700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்டிக்கடை உரிமையாளர்கள் புதுக்கோட்டை சிவா மற்றும் சத்யா ஆகியோரை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை மூவர் மீது வழக்கு சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது விளாங்குறிச்சி ரோட்டில் சந்தேகிக்கும் படி நின்றிருந்தவர்களை விசாரித்தபோது, 4.350 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, தர்மபுரி சதிஸ்குமார், கிருஷ்ணகிரி சந்துரு ஆகியோரை கைது செய்தனர். மஞ்சுநாத் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us