நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி வேன் மீது தனியார் பஸ் மோதல்
காரமடை -மேட்டுப்பாளையம் சாலையில், குட்டையூர் அருகே தனியார் பள்ளி வேன் சாலையோரம் நின்ற குழந்தைகளை அழைத்து செல்வதற்காக, ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த தனியார் பஸ், பள்ளி வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் தனியார் பஸ்ஸில் இருந்த ஒரு இளம்பெண், பள்ளி சிறுவன் மற்றும் வேனில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்ஸை ஓட்டிய, தனியார் பஸ் டிரைவர் சனிஷ், 29 என்பவரை கைது செய்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.--