/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள்:அடுத்தடுத்து திருட்டு
/
கிரைம் செய்திகள்:அடுத்தடுத்து திருட்டு
ADDED : நவ 20, 2025 01:50 AM
அடுத்தடுத்து திருட்டு கவுண்டம்பாளையம் பாலாஜி கார்டனில் வசிப்பவர் விக்னேஷ், 25. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, மறுநாள் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியன திருட்டுப் போய் இருந்தது. இதே போல கவுண்டம்பாளையம் ராஜன் நகரில் வசிப்பவர் ஸ்டான்லி,48. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பினார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இத்திருட்டு சம்பவங்கள் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரும்பு பைப்பு திருடியவர்கள் கைது கோவை மாவட்டம் காரமடை அருகே கடந்த ஏப்ரல் மாதம், திம்மம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பெனியிலிருந்து, இரும்பு பைப்புகள் திருடப்பட்டன.
இதுதொடர்பாக காரமடை போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வந்தனர்.
இதனிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியப்பன், 40, மனோஜ், 25, முருகேசன், 46, கார்த்திக், 26, பாக்கியராஜ், 44, என தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.--

