தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை


UPDATED : ஜூன் 16, 2026 08:48 PM

ADDED : ஜூன் 16, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 08:48 PM ADDED : ஜூன் 16, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர், சிறுமுகை ரோட்டை சேர்ந்த ரஞ்சிதமணி மகன் ஸ்ரீ ராம ஜெயம், 46. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 15 மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

நாகலட்சுமி கடந்த மாதம் மருந்து குடித்து இறந்து விட்டார். மனைவி இறந்ததால் வருத்தத்தில் இருந்த ராமஜெயம் கடந்த 14ம் தேதி சாணி பவுடர் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் ஆண் சடலம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி அறிவொளி நகரில் வசித்தவர் ஜெயக்குமார், 46. திருமணமாகவில்லை. இவர் கடந்த, 13ம் தேதி அருகே உள்ள தோட்டத்தில் வேலைக்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. ஜெயக்குமாரின் தந்தை பழனிசாமி மகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை அங்குள்ள துரைசாமி தோட்டத்து கிணற்றில் சடலமாக ஜெயக்குமார் கிடந்தார். சந்தேகப்படும்படியான காயங்கள் இல்லை. பிரேதத்தை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் மீட்டனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளிக்கு கத்திக்குத்து சக தொழிலாளி கைது

அன்னூர்:சக தொழிலாளியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சரவணம்பட்டியை சேர்ந்த நம்பிராஜன், கணேசபுரத்தில், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடையின் பின்புறம் உள்ள அறையில் தங்கி உள்ளனர்.

இதில் திருநெல்வேலியை சேர்ந்த புல்லையா, 44. என்பவருக்கும், சக தொழிலாளியான வானமாமலை, 35. என்பவருக்கும், இடையே சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் கடந்த 15ம் தேதி கடையின் பின்புறம் உள்ள அறையில், புல்லையா, கத்தியால் வானமாமலையின் முகத்தில் குத்தி விட்டு தப்பி சென்றார்.

ரத்த காயம் அடைந்த வானமாமலைக்கு அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற புல்லையாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us