UPDATED : ஜூலை 14, 2026 09:55 PM
ADDED : ஜூலை 14, 2026 09:11 PM
சூலுார் அருகே, 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக்,33, உடந்தையாக இருந்த தஞ்சாவூர் மோகன்,31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த போது, தடய அறிவியல் நிபுணர்கள் உட்பட 16 பேர் சாட்சியம் அளித்தனர். 114 அரசு தரப்பு சாட்சிகளில், 50 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். விசாரணை இன்றும் தொடர்கிறது.
கல்லூரி மாணவி தற்கொலை
கோவில்பாளையம்:கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு என்னும் ஊரைச் சேர்ந்த ரகு மகள் மகாலட்சுமி, 21. நான்காம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு படித்து வந்தார்.
காலை கல்லூரிக்கு சென்றவர் மதியமே விடுதி அறைக்கு திரும்பி உள்ளார். மாலையில் சக தோழிகள் சென்று பார்த்தபோது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
