UPDATED : ஜூலை 15, 2026 10:26 PM
ADDED : ஜூலை 15, 2026 10:13 PM
: சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன்,45. விசைத்தறி தொழிலாளி. இரு மகள்களில் மூத்த மகள், ஐ.டி., நிறுவனத்திலும், இளைய மகள் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு இளைய மகள் வந்துள்ளார். அப்போது, சரவணன், நிலமட்ட தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது அக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சரவணன் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.
மகளிடம் பாலியல் சீண்டல்போக்சோவில் தந்தை கைது
கருமத்தம்பட்டி, ஜூலை 16 -
மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு, மூன்று பெண் குழந்தைகள். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து, தருமபுரியை சேர்ந்த உத்தமன், 34 என்பவரை அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மில் குடியிருப்பில் தங்கி இருவரும் வேலை சென்று வந்தனர். மூன்று சிறுமிகளும் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் 14 வயதான இரண்டாவது மகளுக்கு, கடந்த இரு நாட்களாக, உத்தமன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, அவசர உதவி எண், 100 க்கு போன் செய்து, நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார், அச்சிறுமியிடம் விசாரித்தனர். உத்தமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.
