ADDED : ஆக 12, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
கஞ்சா சாக்லேட் வாங்கியவர் கைது அன்னூர் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார் மேட்டுப்பாளையம் சாலையில், ஜெ.ஜெ. நகர் அருகே ரோந்து சென்றனர். இதில் ஒருவரை சோதனை செய்தபோது, அவர் பீகார் மாநிலம், சித்தாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் ராம், 23. எனவும், தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து, 600 கிராம் எடையுள்ள, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 கஞ்சா சாக்லெட்டுகள் சிக்கின. விசாரணையில், தனியார் செயலி (ஆப்) மூலம் ஆர்டர் செய்து கொரியர் வாயிலாக சாக்லெட்டுகளை பெற்றதாகவும், வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
