ADDED : ஆக 24, 2026 05:31 PM
கஞ்சா விற்ற மூவர் கைது - கருமத்தம்பட்டி அடுத்த கரிச்சிபாளையத்தில் கஞ்சா விற்பதாக, கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்ற ராகேஷ், 22 என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா சவுத்திரி என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரிந்தது. முன்னா சவுத்திரி தங்கியிருந்த அறையை கண்டு பிடித்தனர். அங்கு இருந்த லிபுன் நாக், 29 என்ற நபரை விசாரித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முன்னா சவுத்ரி ஒடிசாவில் இருந்து கஞ்சா கொண்டு வந்து தந்ததாக கூறினார்.
முன்னா சவுத்ரியின் செல்போன் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், கேரளா சென்ற பஸ்சில் முன்னா சவுத்திரி பயணிப்பது தெரிந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், முன்னா சவுத்ரியிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
ஊக்க மருந்து விற்ற2 பேர் கைது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், அறிவொளி நகர் அருகே மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்.ஐ., சரத்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து போது, ஏராளமான ஊக்க மருந்து பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் கோவையை சேர்ந்த அருண் பார்த்திபன், 28, ஜிம் பயிற்சியாளர், ஹரி, 27, பைக் மெக்கானிக் என்பது தெரிய வந்தது. இவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது சோர்வாக இல்லாமல் இருக்க ஊக்க மருந்து பயன்படுத்தியதும், அதை வெளிச்சந்தையில் பல்வேறு ஜிம்களுக்கு, விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 எம்.எல்., அளவிலான 1,747 ஊக்க மருந்து பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
----
