தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2 கிலோ கஞ்சா பறிமுதல்

2 கிலோ கஞ்சா பறிமுதல்

2 கிலோ கஞ்சா பறிமுதல்


UPDATED : ஆக 31, 2026 07:59 PM

ADDED : ஆக 31, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:59 PM ADDED : ஆக 31, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர் அடுத்த பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சூலூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனி அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்நபர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அரவிந்த் அவாஸ்தி, 46 என்பதும், டிரைவராக பணிபுரிவதும் தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. அதை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில், பெட்ரோல் பங்க் அருகே எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார், நேற்று மதியம் சோதனை நடத்தினர். இதில் தேனி மாவட்டம், பெரிய குளத்தைச் சேர்ந்த ராம்குமார், 28, என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரியின் கடைசி மூன்று எண்கள் எழுதிய ஐந்து சீட்டுகள் வைத்திருந்தார்.

போலீசார் அந்த லாட்டரி சீட்டுகளையும், 150 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ராம்குமாரை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us