UPDATED : செப் 01, 2026 08:50 PM
ADDED : செப் 01, 2026 07:51 PM
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் முகமது ரபீக், 65. மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது பைக்கில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வியூ பாயிண்ட் அருகே அவருக்கு முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வாகனம் வந்ததால், இடது பக்கமாக பைக்கை திருப்பினர்.
இதில், லாரியின் பின்பக்கத்தில் முகமது ரபிக் ஓட்டி வந்த பைக் மோதி, கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, அங்குள்ளவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
--
