ADDED : ஆக 18, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
கத்தியை காண்பித்து
மிரட்டி வழிப்பறி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்ரே. வேலாண்டிபாளையம், ராக்கம்மாள் வீதியில் தங்கியுள்ளார். அங்குள்ள பொங்காளியம்மன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் நடந்து சென்ற அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மர்ம நபர்கள் ரூ.3,500, போனை பறித்து தப்பினர். சாய்பாபாகாலனி போலீசார் விசாரித்து வேலாண்டிபாளையம் ஹரிஹரன், 23, வெங்கிட்டாபுரம் வாசு, 24, பி.என்.புதுார் கிருஷ்ணமூர்த்தி, 24, பாலாஜி, 25 ஆகியோரை கைது செய்தனர். இன்னும் இருவரை தேடுகின்றனர்.
