/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் சி.எஸ்.அகாடமி சாதனை
/
கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் சி.எஸ்.அகாடமி சாதனை
ADDED : பிப் 01, 2025 02:04 AM

கோவை; கோவையில் உள்ள சி.எஸ்., அகாடமி பள்ளியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர், 2023-24 ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வில், உலகளவில் சாதனை படைத்துள்ளனர்.
திருச்சி ரோட்டில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சி.எஸ்., அகாடமியின் இயக்குனர் விக்ரம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சர்வதேச பள்ளி பாடத்திட்டத்தில், ஏ.எஸ்., என்கிற உயர் நிலையில் படிக்கும் மாணவி ஷிவி விக்ரம், தேர்வுகளில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தியாவில் வெறும் ஐந்தே மாணவர்களே இந்த தேர்வில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஐ.ஜி.சி.எஸ்.இ., எனும் நிலையில் பயிலும் மாணவர் பிரணவ் இளங்கோவும், கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இவர், இந்தியாவில் முன்னிலை பெற்ற, 30 பேர்களில் ஒருவராக உள்ளார்.
மாணவர்களுக்கு வழிகாட்டிய கணித ஆசிரியர்கள் தாசரி சைதன்யா மற்றும் மோகன பிரியா ஆகியோருக்கு, சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பள்ளித் தலைவர் சோனி தாமஸ், முதல்வர் சாந்தப்ரியா ஆகியோரும் மாணவர்கள், ஆசிரியர்களை வாழ்த்தினர்.