/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பளுதுாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவி வெண்கலம்
/
பளுதுாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., மாணவி வெண்கலம்
ADDED : அக் 24, 2024 09:44 PM
கோவை- மாநில அளவிலான பளுதுாக்கும் போட்டியில் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
'முதல்வர் கோப்பை' மாநில அளவிலான பளுதுாக்கும் போட்டி சென்னையில் நடந்தது. இதில், மாநிலத்தின், 38 மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், அவிநாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி சந்தியா வெண்கல பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
மாணவியை பள்ளி தாளாளர் ஜேஸ்மின், உதவி தலைமை ஆசிரியர் ராஜா ரமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, சுகிர்தா ஆகியோர் பாராட்டினர்.

