/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தக்குழாய் அடைப்பை அறிய உதவும் சி.டி.ஸ்கேன்
/
ரத்தக்குழாய் அடைப்பை அறிய உதவும் சி.டி.ஸ்கேன்
ADDED : செப் 29, 2025 12:43 AM

உ லக சுகாதார நிறுவனம் சார்பில், இருதய நோய் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து, பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் கூறியதாவது:
இருதய ரத்தக்குழாய்களில் அடைப்பு கண்டறிய, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. சி.டி. ஸ்கேன் வாயிலாகவும், தற்போது ரத்தக்குழாய் அடைப்புகளை கண்டுபிடிக்க முடியும்.
மூளை, மற்ற உடல் பாகங்களுக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் சிறந்த பரிசோதனையாக இருக்கும் என இருந்த நிலையில், புதிய தலைமுறை சி.டி. ஸ்கேன் வாயிலாக, இரண்டு விதங்களில் ரத்தக்குழாய் அடைப்புகளை கண்டறிய முடியும்.
கால்சியம் பரிசோதனையில், மூன்று நிமிடத்தில் இருதய ரத்தக்குழாய்களில் கால்சியம் படிமானங்கள் இருப்பதை கண்டறியலாம். கால்சியம் படிமானங்கள் அதிகமாக இருந்தால், ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மூன்று முதல் ஆறு நிமிடங்கள், ரத்தக்குழாய் அடைப்பு, மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளை அறியலாம். இந்த புதிய பரிசோதனை முறையை, பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் வாயிலாக, இருதயத்தை பாதுகாக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.