UPDATED : ஜூலை 04, 2026 02:52 PM
ADDED : ஜூலை 04, 2026 04:10 AM
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - அரை கப் பழம், காய்கறிகள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை எடுத்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்துவிட்டு, அரிசியை நன்றாகக் கழுவவும். ஒரு துணியில் பரப்பி மின்விசிறிக் காற்றில் உலர்த்தவும். பிறகு அதை எடுத்து ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், மிளகு, கறிவேப்பில்லை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பான அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடித்து வைத்த கறிவேப்பிலை பொடியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் 2 கப் தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்ததும் அதில் பொடித்த அரிசி ரவையை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் வற்றி கலவை வெந்து கெட்டியாக வரும் போது தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கொட்டியான பதம் வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்.
இந்த கலவை நன்றாக ஆறியதும் கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
அடுத்து இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், இட்லி தட்டில் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கறிவேப்பிலை மிளகு கொழுக்கட்டை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.
