/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடிக்கையாளர் சேவை குறைபாடு: வங்கிக்கு, ரூ.1 லட்சம் அபராதம்
/
வாடிக்கையாளர் சேவை குறைபாடு: வங்கிக்கு, ரூ.1 லட்சம் அபராதம்
வாடிக்கையாளர் சேவை குறைபாடு: வங்கிக்கு, ரூ.1 லட்சம் அபராதம்
வாடிக்கையாளர் சேவை குறைபாடு: வங்கிக்கு, ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : நவ 28, 2025 03:19 AM
சூலுார்: வாடிக்கையாளருக்கு முறையான சேவை அளிக்காத வங்கிக்கு, மாவட்ட நுகர்வோர் கோர்ட் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்த சம்பத் மனைவி ஷர்மிளா, 37. அரசு பள்ளி ஆசிரியை. இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனிநபர் கடன் பெற்றார். கடனுக்கான மாத தவணை தொகையான, 12 ஆயிரத்து, 119 ரூபாய், அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்களாக தவணை தொகையை வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்யாமல், அபராத வட்டியுடன் தொகையை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து அவர் வங்கிக்கு சென்று கேள்வி எழுப்பினார். தவணை தொகை, 12 ஆயிரம் என்பதற்கு பதிலாக, 52 ஆயிரம் என பதிவு செய்யப்பட்டதால், தவறு நடந்துவிட்டது என, வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
அதன்பிறகு, முறையாக தவணை கட்டப்பட்டு வந்த நிலையில், சரியாக பரிவர்த்தனை செய்யப்படாத கணக்கு என அறிவித்து கணக்கை வங்கி நிறுத்தி வைத்தது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஷர்மிளா, வக்கீல் கார்த்திகை வேலன் வாயிலாக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இரு ஆண்டுகளாக விசாரணை நடந்தது.
அதன்பின் வழங்கப்பட்ட தீர்ப்பில், வாடிக்கையாளருக்கு முறையான சேவை வழங்காமல், மன உளைச்சல் ஏற்படுத்திய வங்கி நிர்வாகம், ஷர்மிளாவுக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணமும், வழக்கு செலவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், என, உத்தரவிட்டது.

