/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிட்டர் உட்பட மூவரிடம் 46 லட்சம் ரூபாய் மோசடி: சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
/
ஆடிட்டர் உட்பட மூவரிடம் 46 லட்சம் ரூபாய் மோசடி: சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
ஆடிட்டர் உட்பட மூவரிடம் 46 லட்சம் ரூபாய் மோசடி: சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
ஆடிட்டர் உட்பட மூவரிடம் 46 லட்சம் ரூபாய் மோசடி: சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
ADDED : டிச 19, 2024 06:10 AM
கோவை; ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பணத்தை இழப்போரின் எண்ணிக்கை, கோவை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெவ்வேறு பாணியில் கோவையில் மூவரிடம் ரூ. 46 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.
l வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் கவுரிசங்கர், 35. இவர், பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தார். இந்நிலையில், இவரின் மொபைல் எண்ணை 'இ 24 கோல்டு இன்வெஸ்டார் குரூப்' என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ளனர். குழுவில் இருந்த ஒரு நபர், 'பையர்ஸ்' என்ற செயலியை, கவுரிசங்கருக்கு அனுப்பியுள்ளார்.
கவுரிசங்கரை தொடர்பு கொண்டு, இந்த செயலி வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர், பல்வேறு தவணைகளில் ரூ.27 லட்சத்து 37 ஆயிரத்தை, முதலீடு செய்தார். ஆனால், அவரால் லாப பணத்தை எடுக்க முடியவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
l போத்தனுார், கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணிடம் ஆன்லைன் வேலை தருவதாக கூறி, ஒரு கும்பல் ரூ. 10 லட்சத்து 34 ஆயிரத்து 335 மோசடி செய்துள்ளது. பெண்ணை தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவர்கள் அனுப்பும் ஓட்டல்கள் குறித்து, ஆன்லைனில் நல்ல 'ரிவ்யூ' கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என கூறினர்.
ஒரு ரிவ்யூவிற்கு ரூ.100 வரை கிடைக்கும். ஒரு நாளைக்கு சுமார், 50 ஓட்டல்கள் வரை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த பணியை செய்ய ரூ. 5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு கமிஷன் பணம் கிடைக்கவில்லை. சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பின்னர், அவரை தொடர்பு கொண்ட மோசடி கும்பல், மேலும் ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் முதலீட்டு பணம் மற்றும் கமிஷன் அனைத்தும் கிடைத்து விடும் என தெரிவித்துள்ளார்.
அப்பெண் பல்வேறு தவணைகளில், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 335 பணத்தை அனுப்பினார்.
அதன் பிறகும் பணம் கிடைக்கவில்லை. அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் மீண்டும் புகார் அளித்தார்.
l மென்பொருள் இன்ஜினியரான மகேந்திரனின்,40 மொபைல் எண்ணிற்கு அழைத்த மர்ம நபர்கள் அவரின் பெயரில் சட்ட விரோத பார்சல்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பார்கள் எனவும் தெரிவித்தனர். அதே போல், 'ஸ்கைப்' காலில் ஒருவர் அழைத்தார்.
போலீஸ் அதிகாரி போல் உடை அணிந்திருந்த அவர், மகேந்திரனின் வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
வங்கி கணக்கை ஆய்வு செய்ய, வங்கியில் உள்ள பணத்தை அனுப்புமாறு கூறினார்.
பதற்றத்தில் மகேந்திரன் வங்கி கணக்கில் இருந்து, ரூ. 8 லட்சத்து 82 ஆயிரத்தை மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
அதன் பின்னர், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மகேந்திரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.