ADDED : செப் 18, 2026 04:11 PM
கோவை, செப். 19–
வீடியோ கான்பிரன்ஸ் முறையில் சிங்கப்பெண் சிறப்பு படை குழுவினருக்கு ஆய்வு மற்றும் பயிற்சி நேற்று நடந்தது. கோவையில் மாநகர கமிஷனர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இக்குழு போலீசார் பங்கேற்றனர்.
தற்போது வரை நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், எதிர்கொண்ட புகார் விபரஙணகள், தீர்வுகள் குறித்து கேட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
‘சைபர் குற்றங்களில் சமீபகாலமாக பெண்கள், பள்ளி மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இணையதள பயன்பாடு, சமூகவலைத்தளங்களில் பாதுகாப்பான நடைமுறை, மொபைல் பயன்பாட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள், அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதற்காக சிங்கப்பெண் குழுவினருக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என்று உயர் அதிகாரிகள் கூறினர்.
